திங்கள், 5 ஜூலை, 2010

சுந்தர மூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ் அணிந்துரை தொடர் 3

சுந்தர மூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ் அணிந்துரை தொடர் 3

11) பிரமன் சரஸ்வதியைப் படைத்தான். அவலழகைக் கண்டு மோகித்து அவள் பயந்தோடியும் விடாமல் அவளைப் புணர்ந்து தம் மனைவியாக்கிக் கொண்டான். தாம் படைத்த மகளையே இவ்வாறு மனைவியாக்கிக் கொண்டதைப் பரிகசித்த முனிவர்களாகிய மரீச புத்திரர் 6 பேர்களையும் சினந்து அசுரர்கள் ஆகுமாறு சபித்தான். இதே போன்று இந்திரன் வேண்டுகோளின் மீது திலோத்தமையைப் படைத்து அவளையும் மோகித்துக் கூடினான்.

12) பிரமன் இதே போன்று தாமரை மலரிலிருந்து பத்மை என்ற பெண்ணைப் படைத்து அவளைப் புணர முயல, அவள் எவ்வளவோ கெஞ்சியும் விடாமல் அவளைப் பலவந்தமாகக் கற்பழிக்க அவள் அதனால் கருக்கொள்ள, தேவர்கள் இதையறிந்து நையாண்டி செய்ய இதைச் சகிக்காத பிரமன் மீண்டும் அவளைப் புணர்ந்து அவள் கருவிலிருந்த தன ஆண் குறி மூலம் உறிஞ்சி இழுத்து விட்டான்.

இவை மகளைத் தகப்பனே புணரும் வழக்கத்தைக் காட்டுவதல்லவா?

13) பெற்ற தாய் மீது மோகங் கொண்டு, அதற்குப் பாதகமாயிருக்கும் தந்தையைக் கொன்று தாயுடன் கலவி செய்து இன்ப வாழ்வு நடத்திய ஒரு பார்ப்பனப் பையனுக்குப் பரமசிவன் முக்தியளித்ததாகத் திருவிளையாடல் புராணம் கூறுகிறது.

இது தாயைப் புணர்ந்தாலும் முக்தி நிச்சயமென்பதன் மூலம் தாயைப் புணரும் வழக்கத்தைக் காட்டவில்லையா?

14) தாருகாவனத்து ரிசிபத்தினிகள் அழகிகள் என்பதற்காகப் பரமசிவன் அவர்களை மயக்கிப் புணர்ந்து அவர்கள் கற்பை அழித்தான்.
15) பிரமனோ தன பெர்த்தியாகிய தாச்சாயணியின் அழகைக் கண்டு மோகித்து வீர்யத்தை விட்டான். பரமசிவன் மனைவியாகிய பார்வதி தேவி மீது பிரமன் காமமுற்று பரமசிவனைப் போல் 5 தலைகளுடன் சென்று அவளை அணைத்தான்.

16) இந்திர சபையில் ஊர்வசி நடனமாட பிரமன் அவளைப் பார்த்து மோகித்து வீரியத்தை வெளியே விட்டான்.

17) துரோணரின் மனைவி கிருபியின் அழகினை அறிந்த பரமசிவன் அவள் மீது காமவெறி கொண்டு, அவளை நிர்வாணமாக்கி நிற்க வைத்துப் பார்த்து வீரியத்தை விட, அதன் பலனாக அஸ்வத்தாமன் பிறந்தான்.

18) கவுதம முனிவர் மனைவி அகலிகை அழகி எனக் கேள்விப்பட்ட இந்திரன் இரவு நடுச்சாமத்தில் முனிவரை ஏய்த்து வெளியேறச் செய்து அம முனிவர்போல இந்திரன் வேடம் பூண்டு அகலிகையைப் புணர்ந்தான். இதே போன்று அவரவரின் கணவர்களைப் போன்று நடித்து இந்திரத் துய்மன் மனைவியையும் தேவசன்மன் மனைவியையும் பாரிசாதன் மனைவியையும் கற்பழித்தான்.

19) அக்னி பகவானின் மருமகளை எமதரும பகவான் கண்டு மோகித்து அவள் கணவன் இல்லாத சமயத்தில் அவளைப் புணர்ந்தான்.

20) அக்னி பகவான் சப்தரிசிகளின் யாகத்திற்குச் சென்று அந்த ரிசிகளின் மனைவிகள் மீது மையல் கொண்டான். சுதரிசனை என்பவளைப் பலாத்காரத்தினால் மணந்தான் .
21) சலந்திரன் மனைவி விருந்தை மீது மகாவிஷ்ணு மோகங் கொண்டு சலந்திரனைச் சூதால் கொன்று அவனைப் போன்று வேடம் பூண்டு விருந்தையைக் கற்பழித்தான்.
22) அனசூயை அழகி என்று கேள்வி பட்டு அவளைக் கற்பழிக்கவேன்று பிரமா, விஷ்ணு, சிவன் ஆகிய முமூர்த்திகளும் புறப்பட்டுச் சென்று அவளை நிர்வாண மாக்கினர் .

இவை பிறர் மனைவிகளைக் கண்டு காமுறுதலும் கற்பழித்தலுமாகிய செயலைக் காட்டவில்லையா?

தொடரும்