ஞாயிறு, 18 அக்டோபர், 2009

சுரர் யார் ?

சுரர் யார் ?

மறைமலை அடிகளாரின் படப்பிடிப்பு

"சோமப் பூண்டின் சாற்றினாற் சமைத்தக்கள்ளை மிகுதியாய்ப் பருகி வெறித்திருந்தன ரென்பதும் சூதாட்டத்தில் நிரம்ப இறங்கி பலவகையான அல்லலுக்கு இரையாகின ரென்பதும் இருக்கு வேதத்திற் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன." (the leading vices of the aryan race have always been drinking and gambling. The rig veda bears ample witness to both "vedic india" by Zenaide A.Ragozin-page875)


கடும் புயற்காற்றைப் போல , யான் பருகியிருக்குங்கள் என்னை உயரத் தூக்கிச் செல்கின்றது ; யான் சோமச் சாற்றை பருகியிருக்கின்றேன் அல்லேனோ ?

விரைந்து பறக்குங் குதிரைகள் ஒரு தேரை இழுத்துச் செல்வது போல், யான் பருகியிருக்குஞ் சாறு என்னை மேலே சுமந்து செல்கின்றது ; யான் சோமச் சாற்றைப் பருகியிருக்கின்றேன் அலேனோ ! ஆ! இவ்வகன்ற மண்ணுலகைப் பெயர்த்தெடுத்து இங்கேயாவது அங்கேயாவது வைப்பேன் . யான் சோமச்சாற்றைப் பருகியிருக்கின்றெனல்லேனோ. இவையெல்லாம் "சோம பானம் " எனும் அக்கால உற்சாக பானம் குடித்த ஆரியனின் அனுபவ உரைகள் (படிக்க - ரிக் மண்டலம் 10 ரிக்குகள் 116)

மூஜவான் மலையில் வளரும் சோமப்பூண்டின் மிகுந்த கள்ளைவிட, என்றும் உறங்காத , இச்சூதுகாய் என் மனத்திற்கு மிக்க இன்பத்தைத் தருகின்றது.

முடிவாக மிஞ்சிய ஒரு சிறு முனையையுடைய இச்சூதுகாயின் பொருட்டு என் மனைவியையும் யான் நீக்கிவிட்டேன்.

தன் செல்வமெல்லாம் சூதுகாய் என்னும் விரைந்த குதிரையாற் கவரப்பட்டவன்றன் மனைவியை ஆடவர் பிறர் தழுவுகின்றார்.''

சூதாடிச் சொக்கனான ஆரியன் தன் மனைவியை மாற்றார் தழுவுவதைப் பற்றிப் புலம்பியவை இவை(பார்க்க - ரிக்வேதம் 10 ஆம் மண்டிலம் 34)

இவர்கள் அசுரர்கள்

இந்தச் சுரர்கள்தாம் நம்மை அசுரர்கள் என்றனர்.'அ' சேர்த்து எதிர்ப்பெயராக்கினர்.அதாவது, சுரா பானம் குடிக்காதவர்கள் நாம்! எனவே அசுரர்கள்!

கள்ளுண்ணாமை பற்றிப் பத்துப் பாடல்கள் வள்ளுவர் எழுதியிருக்கிறார்.

அது பற்றிப் பத்துப் பாடல்கள் திருக்குறளில் உள்ளன.

நாம் அசுரர்கள்தான்! பொருத்தமான பெயர்தான்!

(ரிக் வேத வரிகளின் தமிழாக்கம் தமிழ்க்கடல் மறை மலை அடிகளாரின் "மாணிக்க வாசகர் வரலாறுங் காலமும்" எனும் நூலில் உள்ளவாறு)

சுரர்களின் ஒழுக்கம்

மறை மலை அடிகள் எழுதுகிறார்."சூதாட்டப் பாட்டுகள்,வேள்வியில் உயிர்களைக் கொல்லும் பூசாரிப் பாட்டுகள்,தமிழர் மேற் போரிடுமுன் இந்திரனை வேண்டி பாடியப் பாட்டுகள் போல்வனவே மிகுதியும் நிரம்பிய இருக்கு முதலான ஆரிய நூல்கள்தாம் சிவபெருமான் அருளிச் செய்தனவாம்!"

வேதகாலத்தில்தான் அப்படி என்றெல்லாம் யாராவது கூறினால் பாரத காலத்திலும் அப்படித்தான் என்பதை உணர வேண்டும். தசராவும் தீபாவளியும் சூதாட்டத்திற்கென்றே ஏற்படுத்தப்பட்ட பண்டிகைகள் என்பதை வடபுலம் இன்றளவும் என்பித்துக் கொண்டிருக்கிறது. தெற்கே வந்து வணிகம் செய்தோ, வட்டி வாங்கியோ கொலுத்துக் கொண்டிறுக்கும் வடநாட்டார்களும் இந்த விழாக் காலங்களில் சூதாடுவதைக் கடமையாகக் கொண்டிருக்கின்றனர்.

அசுரர் ஒழுக்கம் எப்படி?

"ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி" எனும் திருக்குறளும்
பொருள் கொடுத்துப் பொய்மேற் கொளீ இ அருள்கெடுத்து

அல்லல உழப்பிக்குஞ் சூது" எனும் திருக்குறளும் அசுரர் ஒழுக்கத்திற்குச் சான்றுகள்.

குடித்தவன் தன் தாய் முன்பு வருவதே கொடுமை எனும்ப்போது கற்றோர் முன் எப்படி வரமுடியும்? தன் மகன் செய்யும் எதையும் பொறுத்துக் கொள்ளும் தாய் கூட கள் குடிப்பதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார் என்கிறது அசுரர் அறநூல். அதே போன்று, சூதாடுபவனின் சொத்தெல்லாம் போய், பொய் பேசிடச் செய்வதோடு, எல்லையற்ற துன்பத்தைத் தரும் என்றும் வென்றால் கூட சூதாடாதே அது தங்கத் தூண்டிலை மீன் கவ்வியது போல ஆடுபவனை அழித்துவிடும் என்பது அசுரர்களின் அறநூலாகிய குறள்நூல் கூறும் கருத்தாகும்.

சுரர்களின் ஒழுக்ககேடு

கள்ளுண்டு,காமம் மிகுந்து சுரர்கள் என்னென்ன செய்தனர் எனப் பட்டியலிடுகிறார். மறைமலையடிகள் தம் ''மாணிக்கவாசகர் வரலாறுங்காலமும்'' என்ற நூலில்!

" ஆரிய மாந்தரும் அவரால் தெய்வமாகக் கொள்ளப்பட்டோரும் செய்த காமப்புன்செயல்கள் அவரெழுதி வைத்த நூல்களிலேயே காணப்படுகின்றன.பிரஜாபதி காமங் காழ்ப்பேறித் தன் புதல்வியைப் புணர்ந்து, பின்னர்த்தான் செய்த அத் தீவினைய நினத்து மிக வருந்தினமை சதபதபிரமாணம் (1,7,4) அய்தரேய பிரமாணம் (3 13 ) மத்ஸ்யபுராணம் (3-32,49) முதலிய நூல்களில் வெளிப்படையாகச் சொல்லப் பட்டிக்கின்றது. இந்திரன் அங்ஙனமே வெறி கொண்டு கவுதம முனிவரின் மனைவியான அகலிகையைப் புணர்ந்தமை இராமாயண உத்தர காண்டத்தில் (௩0 ௧௯, ௩௧ ) குறிக்கப்பட்டிருக்கின்றது. விவஸ்வான் புதல்வரான யமனும் யமியும் தமையனுந் தங்கையுமா யிருந்தும், யமி தன் தமையனைப் புணர முயன்றமை இருக்கு வேதத்திலேயே (1010) நன்கெடுத்துச் சொல்லப்பட்டது. "

"வருணப் பிரகாசம் என்னும் வேள்வியை வேட்கும் குரவன் தன் மனைவி பலரைக் கூடியிருக்க வேண்டுமெனக் கருதி, அவளை அவன் வேள்விக் களத்திற்குக் கொண்டு வருகையில் நீ எவ்வெவரோடு கூடியிருந்தனை?' எனக் கேட்டு அவள் வாய்மொழி வினவுதலைச் சதபத பிரமாணம் (2, 5,2,20 ) கூறுதல் கொண்டும் பண்டை ஆரியப் பார்ப்பன மாதரின் காம வொழுக்கம் இனைத்தென்பது துணியப்படு கின்றதன்றோ?" என்று மேலும் சுரர்களின் ஒழுக்கச் "சிறப்பை" மறைமலை அடிகள் விளக்குகின்றார்.

இப்பேர்பட்ட குடிகேடர்கள், சூதாடிகள், காம வெறியர்கள்தாம் சுரர்கள். இவையேதும் இல்லாத மக்களை இக் கேடர்கள் அசுரர்கள் எனக் குறிப்பிடத் தொடங்கி தஸ்யுக்கள், தாசர்கள், இராட்சதர்கள் என்றெல்லாம் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். அசுரர்களை, இராக்கதர்களைக் கொன்றமை எனப் புனைகதை எழுதி வைத்து விழாக் கொண்டாடுகின்றனர். அதன் வழியே, நவராத்திரி, தீபாவளி விழாக்கள் சுரர்களால் அசுரர்கள் அழிக்கப்பட்டனர் எனும் வெற்றி விழாக்கள் என "அவாளால்" வழங்கப்படுகின்றன. இம் மயக்கம் தெளிந்து மதிபெறும் நாள் நம்மவர்க்கு வரும் நாள் எந்நாளோ?

(அடிப்படை : மாணிக்கவாசகர் - வரலாறும் காலமும் இரண்டாம் பகுதி )

சனி, 17 அக்டோபர், 2009

தீபாவளி என்றால் என்ன? - பெரியார் பேசுகிறார்.

தீபாவளி என்றால் என்ன? - பெரியார் பேசுகிறார்.

தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அனேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்தி விட்டார்கள். என்றாலும் இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்.

இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள் தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல ;தமிழர் ( திராவிடர் ) ஆரிய இனத்தானுக்கு அடிமை ,அவனது தலைமைக்கு அடிமை ,மீட்சி பெற விருப்பமில்லாத மானங்கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது .

"மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன் ; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்"என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது .

வெளிநாட்டிலிருந்து பிழைக்கும் வழி தேடிக் கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டு மிராண்டித் தன்மைக்கு ஏற்ற மடமையினால் கொண்ட கருத்துகளை மதுக்குடி வெறியில் உளறி வைத்த தன்மைக்கு ஏற்ப தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களைத் தமிழ் மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று ,அவற்றிற்கு அடிமையாகி , பின்பற்றி தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறர்கள்

அதன் பயனாய் , அம்மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்கு கடவுளர்களாக , மதமாக , நீதி நெறிகளாக பண்டிகை விரதம் , நோன்பு - உற்சவங்களாக நல்ல நாள் தீயநாளாக, அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள்.

இஸ்லாம், கிறிஸ்த்துவம் முதலிய மார்க்கங்களாலும், வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையே ஓர் அளவுக்குத் தலைக்கீழான மாறுதல் ஏற்படும்படியான கல்வி அனுபவமும் ஞானமும் ஏற்பட்டிருந்தும் கூட இந்த மடமை மிக்க ஆரிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறுஞான்மும் மாறுதலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித் திளைத்து வருகிறார்கள்.

எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும் வஞ்சகம் இரண்டகம் மோசத்தாலும் வாழ வேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கி விட்டார்களேயானால் எப்படி யார் எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதை காதில் வாங்கக் கூட செவிப் புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து அவளிடம் ஓடவே வழி தேடுகிறார்களோ அதே போல் நடந்து கொள்கிறார்கள்.

படிப்புக்கும் பகுத்தறிவுக்கும் தொடர்பு இல்லையே

இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ் பண்டிதர்கள், அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உள்பட தமிழ் பண்டிதர்கள் முதல் பெரும் புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் வேதாந்தத்தில் இங்லீஷ் விஞ்ஞான்த்தில் உடற்கூறு, பூகோளக்கூறு இவைகளில் நிபுணர்கள் உள்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கும் அடிமைப்பட்டு ,சிந்தனையின்றி நடந்து கொள்வதென்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும், மடமைக்கும் , மானமற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக்கட்டாக கூற முடியும் ?

நம் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் நம் மக்களுக்கு இந்த , இப்படி பட்ட மடமையை உணரும் அளவுக்கூட அறிவைக் கொடுக்கவில்லை என்றால் இக்கல்வி கூடங்கள் மடமையையும் மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளை நிலம் என்பதை தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும் ? இதில் வதியும் பயிலும் மாணவர்களுக்கு எந்த விதத்தில்தான் மானமும் அறிவும் விளைய முடியும் ?

தீபாவளி என்றால் என்ன? ( புராணம் கூறுவது )

. ஒருகாலத்தில் ஒரு அசுரன் உலகத்தை பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்துக் கொண்டன்.

.தேவர்களின் முறையீட்டின் மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.

. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.

. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசுரன் என்ற பிள்ளையைப் பெற்றது.

. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசுரனுடன் போர் துவங்கினார்.

. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசுரடனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.

. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

௧0. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக ) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!

இந்தப் பத்து செய்திகள்தான் தமிழரைத் தீபாவளி கொண்டாட செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா?

பார்ப்பான் சொன்னால் நம்ப வேண்டுமா?

பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்த போதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்று கொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கக்கத்திலோ தலை மீதோ எடுத்துப் போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன் மீது இருந்திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்தால் பூமிக்கு பன்றி மீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்? இவற்றைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள் அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா?

நரகாசுரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவை ஒன்றையும் சிந்திக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும் நடு சாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும் புதுத்துணி உடுத்துவதும் பட்டாசு சுடுவதும் அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து "கங்காஸ்நானம் ஆயிற்றா?" என்று கேட்பதும், நாம் ஆமாம் என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும் அவன் போவதும் என்றால் இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம் புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டுமிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நங்உ சிந்திக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.


வியாழன், 27 ஆகஸ்ட், 2009

விநாயகன் வினை தீர்ப்பவன் அல்ல. வினை செய்பவன்.

விநாயகன், பிள்ளையார், கணபதி, கணேசன் இப்படி பல்வேறு புனைப் பெயர்களில் இருக்கிற கலவர நாயகன் தமிழகத்திற்கு எப்போது வந்தார், என்பது பெரும் விவாதமாகத்தான் இருக்கிறது.
மதவாதிகள், சாதிய அபிமானிகள் தங்கள் மதத்தை, சாதியை, கடவுளை மிகப் பழமையானவர், பழமையானவை என்று சொல்லிக் கொள்வதில் எப்போதும் பெருமை கொள்வார்கள்.
அப்படித்தான் விநாயகனை வழிபடுகிற, வழிபட பரிந்துரைக்கிற இந்து கண்ணோட்ட ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள், 5 நூற்றாண்டு என்றும் இல்லை அதற்கு முன்பே 2 நூற்றாண்டிலேய வந்து விட்டார் என்றும் பெருமை பட்டுக் கொள்கிறார்கள். (’கடவுள் கொண்டுவரப்பட்டவர்‘ என்பதை அவர்களே ஒத்துக் கொள்கிறார்கள்)
சைவசமயத்தின் கட்டுக்கதையான பெரியபுராணத்தை சேக்கிழர் எழுதுவதற்கு காரணமாக இருந்தது, சுந்தரரின் பாடல்தான் என்று சொல்கிறார்கள். சுந்தரருக்கு அது எப்படி தெரியும் என்றால், அவருக்கு ஒரு கல்லு பிள்ளையார் அந்தக் கதையை சொன்னதாக ‘விட்டலாச்சாரியார்‘ பாணியில் விளக்கம் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் பிள்ளையார் வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர் என்பதை எல்லோரும் ஒத்துக் கொள்கிறார்கள்.
வட இந்தியாவில் ஏன் முதலில் விநாயகன் அவதரித்தார் என்பதை தெரிந்து கொண்டால் அவர் தமிழகத்திற்கு எதற்காக வந்தார் என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
மகாவீரரின் சமணமும், அதன் பிறகு புத்தரின் எழுச்சியும் பார்ப்பன வேதங்களை, வேத மதத்தை அதன் ஜாதிய கண்ணோட்டத்தை பொத்தல் ஆக்கியது. ‘பிறப்பால் எவனும் உயர்ந்தவனும் இல்லை, தாழ்ந்தவனும் இல்லை‘ என்று இந்து மத அல்லது வேத மத எதிர்ப்பாக வீறு கொண்டு நின்றது பவுத்தம். புத்தருக்கு பிறகும் அவரின் சீடர்களால் இந்தியா முழுக்க இந்த அலை ஓயாது பார்ப்பனியத்திற்கு எதிராக அடித்துக் கொண்டே இருந்தது.
அதன் தாக்கத்தால்தான் தமிழகத்து திருவள்ளுவரும்,
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
என்று வேத மதத்தின் மீது காறி உமிழ்ந்தார்.
பவுத்ததின் இந்த அலை, பார்ப்பனியத்தை நிலை குலைய வைத்தது. பார்ப்பனியத்தை காப்பதற்காகத்தான் பெருமாள் பத்து அவதாரங்களை எடுக்கிறார். சிவன் மனித உருவம் (பார்ப்பன) கொண்டு பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
ஆனாலும் பெருமாலும், சிவனும் வீதியில் இறங்கி பக்தர்களோடு நெருக்கமாக இருக்க ஆகம விதிகள் இடம் தரவில்லை. அப்படி இடம் தருவதாக மாற்றிக் கொண்டால், பிறகு அவர்களின் மீதுள்ள ஒரு பயம் கலந்த பக்தி அற்றுப் போகும்.
அல்லது பார்ப்பனர்களின் தலையீடு இல்லாமல் நேரடியாக கடவுளை வழிபட வேண்டிய முறை உண்டாகும் என்பதால், பவுத்தத்தை எதிர் கொள்ள அதுவரை இல்லாத முறையில் ஒரு புதிய கவர்ச்சியான கடவுள் தேவைப்படுகிறார்.
அதன் பொருட்டு பவுத்ததிடம் இருந்து இந்து மதத்தை மீட்க, தோழமையான, யார் வேண்டுமானாலும் தொட்டு உருவாக்க, வழிபட, எங்கு வேண்டுமானாலும் வைத்து புழங்க, நிறுவ ஒரு கடவுளாக உண்டாக்கப்பட்டவர்தான் விநாயகர்.
அதனால்தான் விநாயகர் அரசமரத்தடியிலும் அமர்ந்திருக்கிறார். அரசமரம் என்பது புத்தருக்கு உரியது. அரசமரத்தின் இன்னொரு பெயர்தான் போதி மரம்.
விநாயகர் என்ன காரணத்திற்காக உண்டாக்கப்பட்டாரோ அதை அவர் சிறப்பாக நடத்தி முடித்தார்.
(சைவர்களிடமும் வைணவர்களிடமும் பேதமிருந்தாலும் அவர்களிடம் விநாயகனை வழிபடுவதில் மட்டும் ஒரு ஒற்றுமையை பார்க்க முடியும்.)
அதன் பிறகு எப்போதெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்கள், பின் தங்கிய மக்கள் ஜாதிய ஒடுக்குமுறையை கண்டித்து இந்து மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு குறிப்பாக இசுலாம் மதத்திற்கு மாறுகிறார்களோ அப்பொதெல்லாம் விநாயகர் அவர்களை போய் தடுத்தாட் கொள்வார்.
அதனால்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளில் விநாயகர் சிலை வைக்க அவர்களுக்கு அதிக முன்னுரிமை தருகிறார்கள். அதை இசலாமியர்கள் வீதிகளில் ஊர்வலமாக இழுத்துச் சென்று கலவரம் செய்வதற்கு அவர்களையே பயன்படுத்துகிறார்கள்.
தாழ்த்தப்பட்ட இந்துக்களின் குடியிருப்புகளின் வழியாக செல்ல மறுக்கிற இந்துக் கடவுள்களின் ஊர்வலம், இசலாமியர்களின் குடியிருப்புகள் வழிபாட்டுத் தளங்களின் வழியாக விநாயகனின் ஊர்வலம் கட்டாயம் சென்றே ஆக வேண்டும் என்று இந்துவெறியர்கள் அடம்பிடிப்பதின் உள்நோக்கம் கலவரத்தை மனதில் கொண்டே.
விநாயகன் தீண்டாமையையும், பார்ப்பனியத்தையும் பாதுகாப்பதற்காக ‘தோழமையோடு‘ எந்த கலவரத்தையும் செய்யத் தயாரானவன்.
விநாயகன் வினை தீர்ப்பவன் அல்ல. வினை செய்பவன்.

நன்றி : மதிமாறன் தமிழ்நாடு.


ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

சுந்தர மூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ் நூல் அணிந்துரை தொடர் 2

a௧. சூரியனுடைய தேர் சாரதியின் பெயர் அருணன். இவன் இருகால்களும் அற்ற முடவன். தாயால் அவயங் காக்கப் பட்ட முட்டையிலிருந்து இவன் பிறந்தவன். இவன் இந்திர சபை விநோதங்களைக் காண்பதற்கு பெண் வேடம் பூண்டு அங்குச் சென்றான். இதைக் கண்ட இந்திரன் பெண் வேடத்திலிருந்த அருணனை மோகித்துப் புணர்ந்தான். இதனால் வாலி என்பவன் பிறந்தான். இந்நிகழ்ச்சியால் அருணன் வேலைக்குத் தாமதித்து வர சூரியன் காரணம் கேட்டு நடந்ததை அறிந்து மீண்டும் அருணனைப் பெண் வேடத்தில் வர வேண்டி அவன் அப்படியே வர அவனைச் சூரியன் புணர்ந்தான். இதனால் சுக்ரீவன் பிறந்தான்.

௨. நாரதர் என்னும் மகரிஷி ஒரு நாள் பெண் வேடம் தாங்கியிருக்க அதைக் கண்ட கிருஷ்ணா பரமாத்மா நாரதனைக் கண்டு மோகித்துப் புணர அதன் பயனாய் ௬0 பிள்ளைகள் நாரதருக்குப் பிறந்தன.

௩. தவ வலிமை மிக்க பத்மாசூரன் சிவன் தலையில் கையை வைத்து அழித்துவிட நாடியபோது , மகாவிஷ்ணு மோகினி வேடம் பூண்டு பத்மாசூரனை மயக்கி , அவன் கையை அவன் தலையிலேயே வைத்து எரிந்து போகுமாறு செய்தபின் , அந்த மோகினி வேதத்திலிருந்து விஷ்ணுவை , உயிருக்கு பயந்து அய்வேலங்காயில் ஒளிந்திருந்து சிவன் மோகித்து புணர , அதன் பலனாக அரிதார புத்திரன் பிறந்தான்.

இவை ஆணை ஆண் புணரும் வழக்கத்தை காட்டுபவை அல்லவா?

௪. பரமசிவன் பார்வதியுடன் வனத்தில் உலாவ சென்றிருந்தபோது , அங்கிருந்த சித்திரகூடத்தில் ஆண் -பெண் யானைகள் கலவி செய்வதைப் போன்ற ஓவியத்தைப் பார்த்துக் காமவெறி கொண்டு , பக்கத்தில் இருந்த பார்வதியைப் பெண் யானையக்கி புணர்ந்து , கணபதியைப் பெற்றான் .
௫. சூரியன் பெட்டைக் குதிரையாயிருந்த சஞ்சிகையைக் கூடியதன் பயனாக, அஸ்வினி தேவர்கள் பிறந்தனர்.
௬. பிரமன் திலோத்தமையைப் படைத்து வளழகைக் கண்டு மோகிக்க அவள் பிரமன் செயல் கண்டு பயந்து பெண் மானுருக் கொண்டு ஓட பிரமன் அவளைத் துரத்திக் கொண்டு போய்ப் புணர்ந்தான்.

௭. பாரிஷதன் என்பவனின் மனைவி வபுஷ்டமை என்பவள் மீது இந்திரன் காமம் கொள்ள அவள் அவனுக்கு இணங்காமற் போக இந்திரன் எப்படியாவது அவளைச் சேர்ந்தேயாக வேண்டும் என்று எண்ணிச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். அச்சமயம் பாரிஷதன் அஸ்வமேதம் நடத்தினான். யாக குதிரையுடன் யாக கர்த்தாவின் மனைவியைப் புணர வைப்பது அச்வமேதத்தின் முக்கியச் சடங்கு. ஆகையால் தான் யாக குதிரையாக இருந்தால் பாரிஷதன் மனைவியாகிய வபுஷ்டமையிடத்து யாகப் புரோகிதர்களே சேர்த்து வைப்பார்கள். ஆகையால் தான் யாக குதிரையாக வேண்டுமென்று இந்திரன் உறுதி செய்து கொண்டான். அதன்படி அஸ்வமேதம் நடந்த போது இந்திரன் யாகக் குதிரையைக் கொன்று அதனுடலில் தான் புகுந்து கொண்டான். யாக முறைப்படி யாகக் கர்த்தாவாகிய பாரிஷதனின் மனைவியாகிய வபுஷ்டவையின் பெண் குறியில் யாக ஆண் குதிரையின் குறியை யாகப் புரோகிதர்கள் சேர்த்து வைத்த சமயத்தில் இந்திரன் தம் காம எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டான்.


௯ அஸ்வமேதம், அஜமேதம் போன்ற யாகங்களில் யாக கர்த்தாவின் பத்தினியை, யாக மிருகத்துடன் புணரவைக்கும் வேலையை யாககர்த்தாவும் யாகப்புரோகிதர்களும் சேர்ந்து செய்வர்.
௧0.பூமியைப் பாய் போலச் சுருட்டிக் கொண்டு கடலில் போய் ஒளித்த இரண் யாஷனைப் பன்றி வேடத்தில் சென்று விஷ்ணு கொல்ல, இப்பன்றியைக் கண்டு பூதேவி மோகித்துக் கலவிசெய்ய, இதன் பலனாக நரகாசுரன் பிறந்தான்.
இவை மிருகப் புணர்ச்சி செய்யும் வழக்கத்தைக் காட்டுபவை அல்லவா?
தொடரும்

செவ்வாய், 21 ஜூலை, 2009

சுந்தர மூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ் நூல் அணிந்துரை

தமிழர்களாகிய நம் அனைவருக்கும் குலம் ஒன்றே . நமக்குள் உயர்வு தாழ்வு வேறுபாடுகள் இல்லை. நமக்குக் கடவுளும் ஒன்றே என்னும் உயர்ந்த முறையில் வாழ்க்கை நடத்தியவர்கள் நம் முன்னோர்கள்.
அது மட்டுமல்ல இவ்வுலகின் கண்ணுள்ள ஊர்கள் யாவும் நம் ஊர்களே ; உலக மக்கள் யாவரும் நம் உறவினரே என்ற பரந்த பொதுமைக் கொள்கையைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.

இவ்வளவு சிறந்த வாழ்க்கை முறையும், பரந்த நோக்கமும், ஒற்றுமைப் பண்பும் கொண்டு வாழ்ந்த தமிழ் முதுகுடி மக்களின் மரபினரே நாம் எனின், அறிவாற்றல் மிக்க அப்பெருங் குடி மக்களின் வாழ்க்கைச் சிறப்பில் ஒரு சிறு அளவாவது நம்மிடை இன்றுள்ளதா?

ஏன் இல்லை? என்ன இல்லை? என்பனவற்றை நாம் என்றாவது ஒரு பொழுதாவது எண்ணிப் பார்த்தது உண்டா?

பழந்தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் ஒரே குலத்தினராக வாழ்ந்தார்கள். தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் ஒருவருக்கொருவர் உறவினரே. பெண் கொடுத்தல் கொள்ளல் தமிழர்களுக்குள் பொதுவாக இருந்தது. இன்று தமிழர்களின் நிலை என்ன? எத்தனை ஆயிரம் குலங்கள் குலத்துக்குள் குலங்களாகக் கோத்திரங்கள் எவ்வளவு- பிரிவுகள் ! ஒரே குலத்தினைச் சேர்ந்தவர்களிடையில் கூடப் பெண் கொடுத்தல் கொள்ளல் தடுக்கப் பட்டுத் தமிழ் மக்கள் எத்தனை எத்தனை சில்லறைக் கூட்டங்களாகப் பிரிக்கப் பட்டு விட்டனர்!

நாட்டுடைத் தலைவர்களாக என்னாட்டவர்க்கும் அடிமைப்படாத வீர மறவர்களாக காடழித்து நாடாக்கியர்வர்களாக நீர் வளம், நில வளம் , குடிவளம் கருதிப் பணியாற்றியவர்களாக கடல் வாணிபம் நடத்தியவர்களாக உரோமாபுரி எகிப்தியம் யவனம் சீவகம் கடாரம் போன்ற நாடுகளுடன் தொடர்புடையவர்களாக வாழ்ந்தனர் தமிழ் மக்கள்! அத்தமிழ்ப் பெரு மக்களின் மரபினராகிய நாம் இன்று எடுப்பார் கைப் பிள்ளைகளாக தடி எடுத்தவனை எல்லாம் தண்டல்காரனாக மதித்து அடிமைப்படும் குறை மதியினராக அஞ்சியஞ்சிச் சாகும் கோழைகளாக வறுமையில் வாடி இன்று அதையே நம்பி வாழ்பவர்களாக கடல் கடந்து சென்று வயிறு வளர்க்கும் கூலிகளாக ஆனதேன்? சிந்தித்துப் பார்த்ததுண்டா?

எத்தொழில் புரிபவரேயாயினும் - யாவரேயாயினும் -ஆண்களாயினும் -பெண்களாயினும் கற்பதைக் கடமையாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் மறைந்த தமிழர்கள், கூல வாணிகம், மருத்துவம், மட்பாண்டம் வனைதல் போன்ற பிற தொழில்களில் ஈடுபட்டிருந்தோரும் பழந்தமிழ் நாட்டில் கசடறக் கற்ற பேரறிஞர் களாய் இருந்தனர். காக்கைப் பாடினியர், நச்செள்ளையார், ஔவையார் போன்ற தமிழ்ப் பெண்மணிகளும் பெரும் புலவர்களாய் இருந்தனர். வீரம் செறிந்திருந்தனர்.
ஆனால் இன்று தமிழர்களில் ௧00 க்கு ௯௫ பேர்கள் எழுதப் படிக்கத் தெரியாத தற்குறிகளாய்க் கிடப்பானேன்!

அந்தப் பழங்காலத்தில் உலக நாகரிகத்திற்குத் தாயகமாய் விளங்கியது தமிழ்நாடு. எலி மயிரினும் நுண்ணிய ஆடைகளை நெய்து உலகிற்கு ஈந்து உயர் புகழ் படைத்தது தமிழ் நாடு. உணவு வளம், உடை வளம், உறைவிட வளம் பெற்ற அப்பழங்குடித் தமிழ் மக்கள் உடல் வளமும் உயிர் வளமும் உடையவர்களாக உரம் மிக்க மறவர்களாக மகிழ்ச்சிப் பெருக்குடன் வாழ்ந்தார்கள். ஆனால் இன்று..?
இன்று கூட இயற்கையிலே வளம் குறைந்ததன்று நம் நாடு. நன்செய் , புன்செய் நிலங்கள் மலிந்துள்ள நாடே நம் நாடு. வற்றாப் பேராறுகள் பெருக்கெடுத்தோடும் நாடே நம் நாடு.தங்கம் விளையும் நாடே நம் நாடு. இவ்வளவு இருந்தும் இன்று கோடானு கோடித் தமிழர்கள் உண்ண உணவின்றி , உடுக்க உடையின்றி, இருக்க இடமின்றி அல்லல் படுவது எதனால்?

கப்பற் படை நடத்திக் கடல் கடந்து சென்று சிங்களத்தையும் கடாரத்தையும் கைப்பற்றிய தமிழர், இமயத்தின் உச்சி கண்டு திராவிடக் கோடி பொறித்த தமிழர் , உரோமருக்கும் எகிப்தியருக்கும் சீனருக்கும் யவனருக்கும் உடுப்பளித்த, உணவளித்த தமிழர்- நாகரிகத்தைப் பண்பை, கலைத்திறனை வீரத்தைப் பெருமையை நிலை நாட்டிய தமிழர் மரபில் தோன்றிய மக்கள் இன்று பல்லாயிரக் கணக்கில் தோட்டக் கூலிகளாகவும் சுரங்கக் கூலிகளாகவும் அக் கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று அரை வயிற்றுணவும் இன்றி குடியிருக்கத் தகுந்த குடிசையுமின்றி அவதிப்படுவது எதனால்? சிந்தித்துப் பார்த்தீர்களா?

பழங் காலத்தில் இவ்வளவு உன்னத நிலையில் இருந்த தமிழ் நாட்டை தமிழ் மக்களை இன்றுள்ள அடிமைத் தனத்திலும் சீர்கேட்டிலும் ஆழ்த்தி தமிழ் மக்களைப் பராரிகளாக்கி வைத்த கொடுஞ்செயல் புரிந்த அக் கொடியோர் யார்? அக் கொடுஞ்செயல் என்ன? சிந்தித்துப் பார்த்தீர்களா ?

இன்றோ அறியாமை எனும் இருட்டு, அமாவாசை இரவை விடக் கடுமையாக நம் நாட்டைக் கவ்விக் கொண்டிருக்கிறது . ஒன்றிரண்டல்ல, ஆயிரமாயிரம் சாதிகள் இங்குப் பல்கிப் பெருகி, அவிழ்த்துக் கொட்டிய மூட்டையினின்று உருண்டோடும் நெல்லிக் கனிகள் போன்று மக்கள் பிரிந்து கிடக்கின்றனர். மாரியம்மன் முதல் மன்னார்சாமி வரை , மண் உருவங்கள் முதல் பெண் உருவங்கள் வரை பாம்பு முதல் பன்றி வரை சுமார் ௩௩ கோடி விதமான கடவுள்கள் நாம் வணங்க வேண்டியவை ஆக்கப்பட்டன. சாணிக்குப் போட்டிட்டு அதையும் சாமி என வணங்க வேண்டிய நிலை இன்று ஏற்பட்டு விட்டது.

இவ்வளவுக்கும் காரணம் என்ன? சிந்தித்துப் பாருங்கள். பார்ப்பனர்களும் அவர்களின் மத ஆசாரங்களும் மொழியும் வேத ஆகம புராண சாஸ்திர இதிகாசங்களுமே ஆகும் என்பதை எவராலாவது மறுக்க முடியுமா?

பார்ப்பனர்கள் -ஆரியர் இந்த நாட்டுக்குச் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தனர். இலக்கண வரம்பு இல்லாத தங்கள் சமஸ்கிருத மொழியைத் தெய்விக மொழியெனப் பரப்பினர். முயற்சியில் - வீரத்தில் - உழைப்பில் நம்பிக்கை கொண்டிருந்த தமிழரை, தலைவிதி - கர்ம - பலன் பாவ புண்ணியம் - நரக மோட்சம் என்னும் சூழ்ச்சிச் சொற்களில் அந்தப் பார்பனர்கள் சிக்கவைத்து விட்டனர்.

ஆரியச் சனாதன வெறியர்கள் நம் நாட்டில் சூழ்ச்சியாலும் , சதிச் செயல்களாலும், பிற இழி செயல்களாலும் தங்கள் ஆபாச அநாசார மதக்கேடுகளைப் பரப்பி, இந்த நாட்டு மக்களைப் படிக்க விடாமல் மனு சாஸ்திரம் என்னும் அதரும நூலைச் சட்டமாக்கி வைத்துவிட்டனர். மக்களில் பார்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு வகுப்பினர் என்று பிரித்து, பார்பனர் என்போர் பிரமன் என்னும் கடவுளின் நெற்றியில் பிறந்ததால் மிக உயர்தோர் என்றும், சத்திரியர் தோளிலும், வைசியர் வயிற்றிலும் , சூத்திரர் காலிலும் பிறந்ததால் முறையே ஒருவருக்கொருவர் மட்டமென்றும் உயர்வு தாழ்வு கற்பித்து விட்டனர். சமஸ்கிருத நூல்களைப் பெருவாரியான கடைசி இன மக்கள் படிக்கவோ, கேட்கவோ கூடாதெனத் தடை செய்து விட்டனர்.

இந்நிலையில், பிரமன் ஆகிய ஆண் கடவுள் பிள்ளை பெற முடியுமா என்றோ, அப்படியே பெற்றான் என்றால், அவனுக்கு நெற்றியிலும் தோளிலும் வயிற்றிலும் காலிலும் பெண்குறிகள் இருந்தனவா என்றும், அப்படியே இருந்தனவென்றால் யாருடைய விந்துக்கு இந்த பார்ப்பனர், சத்திரியர் வைசிய சூத்திரர்கள் பிறந்தனர் என்றும் கேட்கும் துணிவை நம் மக்கள் இழந்தனர். இத்தகைய மானக்கேடான கதைகளே ஆரிய-வேத-ஆகம -இதிகாச, சாஸ்திர - புராணங்கள் என்பனவற்றில் உள்ளவை.

பார்பனர்களாம் ஆரியர்களின் சமஸ்கிருத மொழி என்பது இலக்கண வரம்பிலா மொழி ஆகையால், அது வழக்கு ஒழிந்து மொழியிலுள்ள ஆபாச நூல்கள் படிப்பாரர்றுக் கிடந்தாலும், அவற்றின் தத்துவங்கள் நம் மக்கள் மனத்தில் பதிந்துவிட்டன. ௧00-க்கு ௯௫ பேர்கள் நம்முள் கல்வி அறிவற்றவர்களாக ஆக்கப்பட்டுவிட்டப்படியால், அவற்றின் ஆபாச அனாசாரங்களை அறிந்து கொள்ள முடியாமல் அவற்றை அப்படியே நம்பி ஆழ்ந்த மடமையில் மூழ்கிவிட்டனர்.

எத்து மக்கள் நம்பி கிடக்கும் அந்த ஆரிய ஆசாரம் எத்தகையது தெரியுமா? மணந்து கொள்ள விரும்பாத பெண்ணை அவள் அழுந்து புலம்பி மன்றாடினாலும், அவளுடைய உறவினர்கள் தடுத்தாலும் அவர்களை அடித்து கொன்று, அவளை வலிமையால் கொண்டு சென்று புணர்வதும், ஒருத்தி தூங்கி கொண்டிருக்கையிலும், மயக்க நிலையிழிறுக்கயலும், அவளை புனவர்வதும், ஆரிய ஆசாரப்படி திருமனங்கலேயாகும். இவை பார்பனரின் எட்டு வகைதிருமனங்களிர் சேர்ந்தவை.

ஒருத்தி பிள்ளை பெறாமலிருந்தால், பிள்ளை பெறுவதற்காக வேண்டி ௧௧ பேர்களுடன் கலவி செய்யலாம். இப்படிக் கலவி செய்யும் தம் மனைவியை அவள் கனவான் உத்தமியாகவே மதிக்க வேண்டும்; விபசாரியாக கருதக்குடாது. இது பார்பான வேத ஆசாரம்.

பார்பனர்களின் கடவுள் பட்டியலை பார்த்தல், ஆண் கடவுளாக இருந்தாலும் சரி, பெண் கடவுளாக இருந்தாலும் சரி, விபசாரம் செய்யாத ஒன்றையும் காட்ட முடியாது.ஒவ்வொரு ஆண் கடவுளுக்கும் மாணவிகள்- கூத்திகள் என்றும், பெண் கடவுளுக்குக் கணவர்கள் -சோர நாயர்கள் என்றும் இருக்கும். ஒரு பெண்ணை நிர்வாணமாக நிறுத்தி அவள் பெண் குறிக்குப் பூசையிடும் வழக்கமும் ஆரிய ஆசாரத்தில் உண்டு. ஆரியர்களுடைய மதம் நமக்குக் கற்பித்துள்ள கடவுள்களின் தன்மை அம்மம்மா எழுத்தால் விளக்க ஒனாதது.சான்றுக்கு ஒரு சில தருகிறேன்


தொடரும்