செவ்வாய், 21 ஜூலை, 2009

சுந்தர மூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ் நூல் அணிந்துரை

தமிழர்களாகிய நம் அனைவருக்கும் குலம் ஒன்றே . நமக்குள் உயர்வு தாழ்வு வேறுபாடுகள் இல்லை. நமக்குக் கடவுளும் ஒன்றே என்னும் உயர்ந்த முறையில் வாழ்க்கை நடத்தியவர்கள் நம் முன்னோர்கள்.
அது மட்டுமல்ல இவ்வுலகின் கண்ணுள்ள ஊர்கள் யாவும் நம் ஊர்களே ; உலக மக்கள் யாவரும் நம் உறவினரே என்ற பரந்த பொதுமைக் கொள்கையைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.

இவ்வளவு சிறந்த வாழ்க்கை முறையும், பரந்த நோக்கமும், ஒற்றுமைப் பண்பும் கொண்டு வாழ்ந்த தமிழ் முதுகுடி மக்களின் மரபினரே நாம் எனின், அறிவாற்றல் மிக்க அப்பெருங் குடி மக்களின் வாழ்க்கைச் சிறப்பில் ஒரு சிறு அளவாவது நம்மிடை இன்றுள்ளதா?

ஏன் இல்லை? என்ன இல்லை? என்பனவற்றை நாம் என்றாவது ஒரு பொழுதாவது எண்ணிப் பார்த்தது உண்டா?

பழந்தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் ஒரே குலத்தினராக வாழ்ந்தார்கள். தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் ஒருவருக்கொருவர் உறவினரே. பெண் கொடுத்தல் கொள்ளல் தமிழர்களுக்குள் பொதுவாக இருந்தது. இன்று தமிழர்களின் நிலை என்ன? எத்தனை ஆயிரம் குலங்கள் குலத்துக்குள் குலங்களாகக் கோத்திரங்கள் எவ்வளவு- பிரிவுகள் ! ஒரே குலத்தினைச் சேர்ந்தவர்களிடையில் கூடப் பெண் கொடுத்தல் கொள்ளல் தடுக்கப் பட்டுத் தமிழ் மக்கள் எத்தனை எத்தனை சில்லறைக் கூட்டங்களாகப் பிரிக்கப் பட்டு விட்டனர்!

நாட்டுடைத் தலைவர்களாக என்னாட்டவர்க்கும் அடிமைப்படாத வீர மறவர்களாக காடழித்து நாடாக்கியர்வர்களாக நீர் வளம், நில வளம் , குடிவளம் கருதிப் பணியாற்றியவர்களாக கடல் வாணிபம் நடத்தியவர்களாக உரோமாபுரி எகிப்தியம் யவனம் சீவகம் கடாரம் போன்ற நாடுகளுடன் தொடர்புடையவர்களாக வாழ்ந்தனர் தமிழ் மக்கள்! அத்தமிழ்ப் பெரு மக்களின் மரபினராகிய நாம் இன்று எடுப்பார் கைப் பிள்ளைகளாக தடி எடுத்தவனை எல்லாம் தண்டல்காரனாக மதித்து அடிமைப்படும் குறை மதியினராக அஞ்சியஞ்சிச் சாகும் கோழைகளாக வறுமையில் வாடி இன்று அதையே நம்பி வாழ்பவர்களாக கடல் கடந்து சென்று வயிறு வளர்க்கும் கூலிகளாக ஆனதேன்? சிந்தித்துப் பார்த்ததுண்டா?

எத்தொழில் புரிபவரேயாயினும் - யாவரேயாயினும் -ஆண்களாயினும் -பெண்களாயினும் கற்பதைக் கடமையாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் மறைந்த தமிழர்கள், கூல வாணிகம், மருத்துவம், மட்பாண்டம் வனைதல் போன்ற பிற தொழில்களில் ஈடுபட்டிருந்தோரும் பழந்தமிழ் நாட்டில் கசடறக் கற்ற பேரறிஞர் களாய் இருந்தனர். காக்கைப் பாடினியர், நச்செள்ளையார், ஔவையார் போன்ற தமிழ்ப் பெண்மணிகளும் பெரும் புலவர்களாய் இருந்தனர். வீரம் செறிந்திருந்தனர்.
ஆனால் இன்று தமிழர்களில் ௧00 க்கு ௯௫ பேர்கள் எழுதப் படிக்கத் தெரியாத தற்குறிகளாய்க் கிடப்பானேன்!

அந்தப் பழங்காலத்தில் உலக நாகரிகத்திற்குத் தாயகமாய் விளங்கியது தமிழ்நாடு. எலி மயிரினும் நுண்ணிய ஆடைகளை நெய்து உலகிற்கு ஈந்து உயர் புகழ் படைத்தது தமிழ் நாடு. உணவு வளம், உடை வளம், உறைவிட வளம் பெற்ற அப்பழங்குடித் தமிழ் மக்கள் உடல் வளமும் உயிர் வளமும் உடையவர்களாக உரம் மிக்க மறவர்களாக மகிழ்ச்சிப் பெருக்குடன் வாழ்ந்தார்கள். ஆனால் இன்று..?
இன்று கூட இயற்கையிலே வளம் குறைந்ததன்று நம் நாடு. நன்செய் , புன்செய் நிலங்கள் மலிந்துள்ள நாடே நம் நாடு. வற்றாப் பேராறுகள் பெருக்கெடுத்தோடும் நாடே நம் நாடு.தங்கம் விளையும் நாடே நம் நாடு. இவ்வளவு இருந்தும் இன்று கோடானு கோடித் தமிழர்கள் உண்ண உணவின்றி , உடுக்க உடையின்றி, இருக்க இடமின்றி அல்லல் படுவது எதனால்?

கப்பற் படை நடத்திக் கடல் கடந்து சென்று சிங்களத்தையும் கடாரத்தையும் கைப்பற்றிய தமிழர், இமயத்தின் உச்சி கண்டு திராவிடக் கோடி பொறித்த தமிழர் , உரோமருக்கும் எகிப்தியருக்கும் சீனருக்கும் யவனருக்கும் உடுப்பளித்த, உணவளித்த தமிழர்- நாகரிகத்தைப் பண்பை, கலைத்திறனை வீரத்தைப் பெருமையை நிலை நாட்டிய தமிழர் மரபில் தோன்றிய மக்கள் இன்று பல்லாயிரக் கணக்கில் தோட்டக் கூலிகளாகவும் சுரங்கக் கூலிகளாகவும் அக் கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று அரை வயிற்றுணவும் இன்றி குடியிருக்கத் தகுந்த குடிசையுமின்றி அவதிப்படுவது எதனால்? சிந்தித்துப் பார்த்தீர்களா?

பழங் காலத்தில் இவ்வளவு உன்னத நிலையில் இருந்த தமிழ் நாட்டை தமிழ் மக்களை இன்றுள்ள அடிமைத் தனத்திலும் சீர்கேட்டிலும் ஆழ்த்தி தமிழ் மக்களைப் பராரிகளாக்கி வைத்த கொடுஞ்செயல் புரிந்த அக் கொடியோர் யார்? அக் கொடுஞ்செயல் என்ன? சிந்தித்துப் பார்த்தீர்களா ?

இன்றோ அறியாமை எனும் இருட்டு, அமாவாசை இரவை விடக் கடுமையாக நம் நாட்டைக் கவ்விக் கொண்டிருக்கிறது . ஒன்றிரண்டல்ல, ஆயிரமாயிரம் சாதிகள் இங்குப் பல்கிப் பெருகி, அவிழ்த்துக் கொட்டிய மூட்டையினின்று உருண்டோடும் நெல்லிக் கனிகள் போன்று மக்கள் பிரிந்து கிடக்கின்றனர். மாரியம்மன் முதல் மன்னார்சாமி வரை , மண் உருவங்கள் முதல் பெண் உருவங்கள் வரை பாம்பு முதல் பன்றி வரை சுமார் ௩௩ கோடி விதமான கடவுள்கள் நாம் வணங்க வேண்டியவை ஆக்கப்பட்டன. சாணிக்குப் போட்டிட்டு அதையும் சாமி என வணங்க வேண்டிய நிலை இன்று ஏற்பட்டு விட்டது.

இவ்வளவுக்கும் காரணம் என்ன? சிந்தித்துப் பாருங்கள். பார்ப்பனர்களும் அவர்களின் மத ஆசாரங்களும் மொழியும் வேத ஆகம புராண சாஸ்திர இதிகாசங்களுமே ஆகும் என்பதை எவராலாவது மறுக்க முடியுமா?

பார்ப்பனர்கள் -ஆரியர் இந்த நாட்டுக்குச் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தனர். இலக்கண வரம்பு இல்லாத தங்கள் சமஸ்கிருத மொழியைத் தெய்விக மொழியெனப் பரப்பினர். முயற்சியில் - வீரத்தில் - உழைப்பில் நம்பிக்கை கொண்டிருந்த தமிழரை, தலைவிதி - கர்ம - பலன் பாவ புண்ணியம் - நரக மோட்சம் என்னும் சூழ்ச்சிச் சொற்களில் அந்தப் பார்பனர்கள் சிக்கவைத்து விட்டனர்.

ஆரியச் சனாதன வெறியர்கள் நம் நாட்டில் சூழ்ச்சியாலும் , சதிச் செயல்களாலும், பிற இழி செயல்களாலும் தங்கள் ஆபாச அநாசார மதக்கேடுகளைப் பரப்பி, இந்த நாட்டு மக்களைப் படிக்க விடாமல் மனு சாஸ்திரம் என்னும் அதரும நூலைச் சட்டமாக்கி வைத்துவிட்டனர். மக்களில் பார்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு வகுப்பினர் என்று பிரித்து, பார்பனர் என்போர் பிரமன் என்னும் கடவுளின் நெற்றியில் பிறந்ததால் மிக உயர்தோர் என்றும், சத்திரியர் தோளிலும், வைசியர் வயிற்றிலும் , சூத்திரர் காலிலும் பிறந்ததால் முறையே ஒருவருக்கொருவர் மட்டமென்றும் உயர்வு தாழ்வு கற்பித்து விட்டனர். சமஸ்கிருத நூல்களைப் பெருவாரியான கடைசி இன மக்கள் படிக்கவோ, கேட்கவோ கூடாதெனத் தடை செய்து விட்டனர்.

இந்நிலையில், பிரமன் ஆகிய ஆண் கடவுள் பிள்ளை பெற முடியுமா என்றோ, அப்படியே பெற்றான் என்றால், அவனுக்கு நெற்றியிலும் தோளிலும் வயிற்றிலும் காலிலும் பெண்குறிகள் இருந்தனவா என்றும், அப்படியே இருந்தனவென்றால் யாருடைய விந்துக்கு இந்த பார்ப்பனர், சத்திரியர் வைசிய சூத்திரர்கள் பிறந்தனர் என்றும் கேட்கும் துணிவை நம் மக்கள் இழந்தனர். இத்தகைய மானக்கேடான கதைகளே ஆரிய-வேத-ஆகம -இதிகாச, சாஸ்திர - புராணங்கள் என்பனவற்றில் உள்ளவை.

பார்பனர்களாம் ஆரியர்களின் சமஸ்கிருத மொழி என்பது இலக்கண வரம்பிலா மொழி ஆகையால், அது வழக்கு ஒழிந்து மொழியிலுள்ள ஆபாச நூல்கள் படிப்பாரர்றுக் கிடந்தாலும், அவற்றின் தத்துவங்கள் நம் மக்கள் மனத்தில் பதிந்துவிட்டன. ௧00-க்கு ௯௫ பேர்கள் நம்முள் கல்வி அறிவற்றவர்களாக ஆக்கப்பட்டுவிட்டப்படியால், அவற்றின் ஆபாச அனாசாரங்களை அறிந்து கொள்ள முடியாமல் அவற்றை அப்படியே நம்பி ஆழ்ந்த மடமையில் மூழ்கிவிட்டனர்.

எத்து மக்கள் நம்பி கிடக்கும் அந்த ஆரிய ஆசாரம் எத்தகையது தெரியுமா? மணந்து கொள்ள விரும்பாத பெண்ணை அவள் அழுந்து புலம்பி மன்றாடினாலும், அவளுடைய உறவினர்கள் தடுத்தாலும் அவர்களை அடித்து கொன்று, அவளை வலிமையால் கொண்டு சென்று புணர்வதும், ஒருத்தி தூங்கி கொண்டிருக்கையிலும், மயக்க நிலையிழிறுக்கயலும், அவளை புனவர்வதும், ஆரிய ஆசாரப்படி திருமனங்கலேயாகும். இவை பார்பனரின் எட்டு வகைதிருமனங்களிர் சேர்ந்தவை.

ஒருத்தி பிள்ளை பெறாமலிருந்தால், பிள்ளை பெறுவதற்காக வேண்டி ௧௧ பேர்களுடன் கலவி செய்யலாம். இப்படிக் கலவி செய்யும் தம் மனைவியை அவள் கனவான் உத்தமியாகவே மதிக்க வேண்டும்; விபசாரியாக கருதக்குடாது. இது பார்பான வேத ஆசாரம்.

பார்பனர்களின் கடவுள் பட்டியலை பார்த்தல், ஆண் கடவுளாக இருந்தாலும் சரி, பெண் கடவுளாக இருந்தாலும் சரி, விபசாரம் செய்யாத ஒன்றையும் காட்ட முடியாது.ஒவ்வொரு ஆண் கடவுளுக்கும் மாணவிகள்- கூத்திகள் என்றும், பெண் கடவுளுக்குக் கணவர்கள் -சோர நாயர்கள் என்றும் இருக்கும். ஒரு பெண்ணை நிர்வாணமாக நிறுத்தி அவள் பெண் குறிக்குப் பூசையிடும் வழக்கமும் ஆரிய ஆசாரத்தில் உண்டு. ஆரியர்களுடைய மதம் நமக்குக் கற்பித்துள்ள கடவுள்களின் தன்மை அம்மம்மா எழுத்தால் விளக்க ஒனாதது.சான்றுக்கு ஒரு சில தருகிறேன்


தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக