திங்கள், 9 ஆகஸ்ட், 2010

சுந்தர மூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ் 4 அணிந்துரை தொடர்

சுந்தர மூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ் அணிந்துரை தொடர் 4
23) திரவுபதி மகா பதிவிரதைகளுள் ஒருத்தி இவளுக்கு 5 கணவர்கள். இவர்கள் போதாதென்று 6 ஆவதாகக் கர்ணன் என்பவனையும் மோகித்தாள்.
௨௪) மகாபதிவிரதைகளுள் மற்றொருத்தி தாரை . இவள் தேவகுரு பிரகஸ்பதியின் மனைவி . இவள் தன் கணவன் ஊரில் இல்லாத சமயத்தில் , தன் கணவரிடம் படிக்க வந்திருந்த சந்திரன் எனும் மாணவனை மோகித்து , அவனுடன் கலவி செய்து , நீண்ட நாள் வரை அவனுக்கு ஆசை நாயகியாய் இருந்து புதன் என்ற குழந்தையைப் பெற்றுக்கொண்டு மீண்டும் பிரகஸ்பதியின் மனைவியானாள் .

( 25) . கவி முனிவர் மனைவி முகுந்தைக்கு ருக்மாங்கதன் மீது மோகம் வந்தது . அவனோ இவளைச் சேர மறுத்துவிட்டான் . அவளுக்கு ருக்மாங்கதன் மீது மட்டற்ற மையல் ஏற்பட்டு அதே விகாரத்திலிருக்கையில் , இதையறிந்த இந்திரன் ருக்மாங்கதன் போல வேடம் பூண்டு அவளைப் புணர்ந்து மகிழ்வித்தான் .

இவை பிற புருஷரை இச்சிக்கும் குணத்தைக் காட்டவில்லையா ?

(26) . ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவர் . இவர் சிறு பிள்ளையிலேயே வெண்ணை திருடி மத்தால் அடி பட்டவர் . வளர்ந்து பருவ வயதையடைந்தவுடன் பெண் சாயல் எந்த வீட்டில் காணப்பட்டாலும் சரி , உடனே திருட்டுத்தனமாக அப்பெண்ணைக் கூடியவர் . இவ்வாறாகச் சுமார் 60,000 பெண்களைத் திருட்டுத்தனமாக அவர்களுடைய கணவர்கள் அறியாமல் - கலவி செய்தவர் .

இவை திருட்டுச் செயலைக் கற்பிப்பவையாக இல்லையா?

(27) . தேவர்கள் சுராபானம் - சோமபானம் செய்தனர் என்பதாக இதிகாச - புராணங்கள் கூறுகின்றன .

இது மது அருந்துதலைக் காட்டுவதாக இல்லையா?

(28) . கிருஷ்ண பரமாத்மாவின் ஆதரவு பெற்றவர்களும் இந்திராதி தேவர்களின் புதல்வர்களுமான தர்மர் ஆகியோர் தங்களின் மனைவி உள்பட எல்லாவற்றையும் சூதாட்டத்தில் வைத்து தோற்று , அதன் பலனாகச் , சூதாட்டத்தில் தோற்கப்பட்ட பொருளாகிய திரவுபதையை , இராஜசபையில் வைத்து சேலையை அவிழ்த்து , மானபங்கம் செய்தனர் - சூதாட்டத்தில் வென்றவர்கள் .

இது சூதாட்டத்தைக் கற்பிக்கவில்லையா?

(29) . கொலையைக் கற்பிக்கும் சம்பவங்கள் பல , காமவெறியால் விருந்தையின் கணவனை விஷ்ணு கொன்றான் .

(30) . தக்க பருவடையாத - ருதுவாகாத -மச்சகந்தி என்னும் பெண்ணை பட்டப்பகலில் நடு ஆற்றில் படகில் பராசரமுனி காமமுற்று கற்பழித்து விட்டான் .

(31) . இதே போன்று குந்தி பருவமடையாத சிறுமியாயிருக்கையில் சூரியன் காமுற்று கற்பழித்து விட்டான் .

இவை சின்னஞ்சிறுமிகளையும் விடாமல் புணரும் புத்தியைக் காட்டவில்லையா?

தொடரும் .......

1 கருத்து: